ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 7ஆம் தேதி நியூயார்க் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 13வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் கனடா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக இருக்கின்றது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் 13, நவ்னீட் 6, பார்கட் சிங் 18, தில்ப்ரீத் பாஜ்வா 7 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 53/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் கிர்டோன் 3 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதத்தை நழுவ விட்டு 49 (35) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவருடன் சேர்ந்து 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்ரேயாஸ் மோவா 37 (36) ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் கனடா 137/7 ரன்கள் மட்டுமே குவித்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக கிரைக் எங் 2, பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு ஆண்டி பால்பரின் 17 (19) கேப்டன் பால் ஸ்டெர்லிங் 9 (17) லார்கன் டுக்கர் 10 (15) ரன்களில் அவுட்டாகி மெகா பின்னடைவை ஏற்படுத்தினர்.
போதாகுறைக்கு அடுத்ததாக வந்த ஹாரி டெக்டர் 7, குர்டீஸ் கேம்பர் 4 ரன்களில் அவுட்டாகி அயர்லாந்துக்கு கை கொடுக்கத் தவறினர். அப்போது வந்த டிலானியும் மெதுவாக விளையாடி 3 (7) ரன்னில் அவுட்டானதால் 59/6 என சரிந்த அயர்லாந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. இருப்பினும் அப்போது மார்க் அடைர் மற்றும் ஜார்ஜ் டாக்ரல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினர்.
அதனால் கடுமையாக போராடி வெற்றியை நெருங்கிய அயர்லாந்துக்கு கடைசி ஓரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது அந்த ஜோடியில் மார்க் அடைர் 34 (24) ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதே போல எதிர்ப்புறம் டாக்ரல் 30* (23) ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவரில் 125/7 ரன்கள் எடுத்த அயர்லாந்து பரிதாபமாக தோற்றது.
மறுபுறம் 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்ற கனடா சார்பில் அதிகபட்சமாக டிலோன் ஹேய்லிகேர் 2, ஜெராமி கோர்டன் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து கனடா புதிய வரலாறு படைத்தது. மேலும் டி20 உலகக் கோப்பையில் வெற்றியை பதிவு செய்த 22வது அணியாக கனடா வரலாற்றை எழுதியது.
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!