பாதிப்பு - தேடல் முடிவுகள்

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்!

2024-05-10 07:15:35 - 1 week ago

கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்! கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 பேர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும், காய்ச்சல் குணமாகவில்லை. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில்


கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 1 week ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக


துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2024-04-02 11:10:01 - 1 month ago

துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு


வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை- சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்

2024-03-25 08:11:07 - 1 month ago

வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை- சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும். 31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு


துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா

2024-03-24 15:32:32 - 1 month ago

துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது - அதிமுக கூட்டத்தில் பா.ம.கவை தாக்கிய பிரேமலதா திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி


ரீல்ஸ் மோகத்தால் விபரீத செயல்... தாமிரபரணி ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து குதித்த வாலிபர்!

2024-03-16 05:15:43 - 2 months ago

ரீல்ஸ் மோகத்தால் விபரீத செயல்... தாமிரபரணி ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து குதித்த வாலிபர்! இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர். ரெயில்


மாயமான தாஜ்மகால், சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய பனிமூட்டம்

2023-12-27 14:20:59 - 4 months ago

மாயமான தாஜ்மகால், சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய பனிமூட்டம் வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. டெல்லியில் 25-க்கும்


மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

2023-12-25 03:46:29 - 4 months ago

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் பதிவில், "மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 26-ந்தேதி (நாளை) மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு


அப்பன் வீட்டு காசா? - உதயநிதிக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் என்ன?

2023-12-22 08:45:10 - 4 months ago

அப்பன் வீட்டு காசா? - உதயநிதிக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் என்ன? தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த அதி கனமழையால், காணுமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. திங்கட்கிழமை மழை நின்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிக்காக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் திருநெல்வேலி


அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.. மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல்

2023-12-20 15:20:01 - 4 months ago

அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.. மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல் இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு புதிய வகை கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். கோவாவில் 19 பேருக்கும், மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் ஒருவருக்கும் கொரோனா JN.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதை