Tamil News & POLLING

 

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

1 year ago 17 மே 2024 12:49 PM | views : 151
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் சிக்கி, மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 பேர் சிக்கிய நிலையில், 4 பேரை அங்கிருந்தோர் நல்வாய்ப்பாக மீட்டனர்.

மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்.பி. சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் சீமான் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி தமிழகம் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி கனமழை ரஜினிகாந்த் PMK பாமக CONGRESS UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கைது கொலை சட்டசபை தேர்தல் NELLAI EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக SEEMAN வடகிழக்கு பருவமழை நெல்லை COIMBATORE மதுரை TAMIL ACTRESS தமிழ்நாடு தென்காசி கோவை திருநெல்வேலி கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM OPS ஓபிஎஸ் நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை திருமாவளவன் நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் THIRUMAVALAVAN டாப் நியூஸ் டிரெண்டிங் AJITH MADURAI தேவர் THOOTHUKUDI விடுமுறை தீபாவளி தமிழக அரசு TAMIL CINEMA வன்னியர் NORTHEAST MONSOON ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS