தி.மு.க. இளைஞரணி பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் 'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

மாநில அளவிலான இறுதிப் போட்டி நாளை (19-ந்தேதி) அன்றும், பரிசளிப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நாளை மறுநாள் (20-ந்தேதி) அன்றும் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துள்ள சூழலில் போட்டியாளர்களின் நலன் கருதி, இரு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளோம். மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags / குறிச்சொற்கள்: UDHAYANIDHI STALIN உதயநிதி ஸ்டாலின்
பகிரவும் (Share):

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel