ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் செயின்ட் லூசியா நகரில் ஜூன் 24ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதிய சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கினார். குறிப்பாக தரமான மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக 6, 6, 4, 6, 0, 6 என ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்த அவர் 19 பந்துகளில் 50 ரன்கள் தொட்டார். அவருடன் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 15 ரன்னில் அவுட்டானார்.
ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து பட்டையை கிளப்பிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் ஆஸ்திரேலியாவை சூறையாடி சதத்தை நழுவ விட்டாலும் 92 (41) ரன்கள் குவித்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 31 (16), சிவம் துபே 28 (22), ஹர்திக் பாண்டியா 27* (17) ஜடேஜா 9* (5) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 205/6 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2, மிட்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 206 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் ஆரம்பத்திலேயே 6 (6) ரன்களில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் டிராவிஸ் ஹெட் மீண்டும் இந்தியாவை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்ஷ் இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்தலை கொடுத்த போது 37 (28) ரன்களில் அக்சர் படேலின் அபார கேட்ச்சால் அவுட்டானார். அவரை அவுட்டாக்கிய குல்தீப் அடுத்த சில ஓவரில் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெலையும் 20 (12) ரன்களில் போல்ட்டாக்கினார். அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 2 (4) ரன்னில் அக்சர் சுழலில் சிக்கினார்.
அதற்கடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அரை சதமடித்த டிராவிஸ் ஹெட்டும் 76 (43) ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். இறுதியில் டிம் டேவிட் 15, பட் கமின்ஸ் 11* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஆஸ்திரேலியாவை 181/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதனால் 90% ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா செமி ஃபைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்று ஜூன் 27ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மறுபுறம் தோல்வியை ஆஸ்திரேலியா இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. குறிப்பாக ஆப்கானிஸ்தானை அதனுடைய கடைசி போட்டியில் வங்கதேசம் தோற்கடித்தால் ஆஸ்திரேலியா செமி ஃபைனல் வருவதற்கு வாய்ப்புள்ளது.
ஆனால் அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலோ ஆஸ்திரேலியா வெளியேறி ஆப்கானிஸ்தான் உள்ளே வர பிரகாச வாய்ப்புள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற தோனி, விராட் கோலி செய்யாத வரலாற்றை படைத்தார்.
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!