2024 டி20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டி டரூபா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆப்கானிஸ்தான். அது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கிய அந்த அணி, 28 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. தென்னாப்பிரிக்கா வீரர்களின் வேகமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர் ஆப்கானிஸ்தான் வீரர்கள். பிட்ச்சில் லேசான பவுன்ஸ் இருந்ததால் அதை சரியாக கணித்து ஆட முடியவில்லை.
10 ஓவர்களில் எல்லாம் ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. அடுத்து 12வது ஓவருக்குள் அனைத்து விக்கெட்களும் வீழ்ந்தன. 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆப்கானிஸ்தான். அதில் நான்கு வீரர்கள் வேகப் பந்துவீச்சில் பவுல்ட் அவுட் ஆகி இருந்தார்கள். மூன்று வீரர்கள் சுழற் பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி இருந்தார்கள்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் வீரர்களால் பந்தை சரியாக கணித்து அடிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. பந்தின் வேகம் மற்றும் பவுன்சை அவர்களால் கணிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். மிகவும் போராடி முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் படுமோசமாக பேட்டிங் செய்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!