ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்கியது.
ஹராரே நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக முதல் ஓவரின் முதல் பந்தை கேப்டன் சிக்கந்தர் ராசா வீசினார். ஃபுல் டாஸாக வந்த அந்த பந்தை இந்தியாவின் ஜெய்ஸ்வால் சிக்ஸராக பறக்க விட்டார்.
ஆனால் அதை வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து வீசியதால் நோபால் அறிவிக்கப்பட்டு ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் வீசப்பட்ட பந்தில் ஜெய்ஸ்வால் நேராக சிக்ஸர் அடித்து ஒரே பந்தில் 12 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக சர்வதேச டி20 டி20 கிரிக்கெட்டில் முழு பெற்ற நாடுகளுக்கு இடையேயான ஒரு போட்டியின் முதல் பந்திலேயே அதிக ரன்கள் (12) அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
அவரைத் தவிர்த்து முழு அந்தஸ்து பற்ற நாடுகளின் வேறு எந்த பேட்ஸ்மேனும் இப்படி முதல் பந்தில் 10 ரன்கள் கூட அடித்ததில்லை. அதே போல அவருடைய 12 ரன்கள் மற்றும் நோபாலுக்கு வழங்கப்பட்ட 1 ரன்னையும் சேர்த்து இந்தியா முதல் பந்தில் 13 ரன்கள் எடுத்தது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் பந்திலேயே அதிக ரன்கள் (13) குவித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்தது.
இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் முதல் பந்திலேயே 10 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 3வது பந்திலேயே 12 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்து அபிஷேக் ஷர்மா 14 ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் கில் 13 ரன்களில் நடையை கட்டினார்.
அடுத்து வந்த ரியன் பராக் தடுமாற்றமாக விளையாடி 22 (24) ரன்னில் அவுட்டானார். ஆனால் எதிர்புறம் அசத்தலாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரை சதமடித்து 58 (45) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் சிவம் துபே 26 (12), ரிங்கு சிங் 11* (9) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 167/6 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முசர்பானி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!