Tamil News & POLLING

 

வெண்கலம் வென்றார் ஸ்வப்னில்: இந்தியாவுக்கு 3வது பதக்கம்!

1 year ago
02 ஆகஸ்ட் 2024 12:21 AM | views : 142
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்வப்னில் குசாலே மற்றும் அவரது பயிற்சியாளர்கள் திபாலி தேஷ்பாண்டே மற்றும் விஸ்வஜித் ஷிண்டே ஆகியோருடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி வாயிலாக பேசினார்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "இந்த பதக்கம் மராட்டியத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஸ்வப்னில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார். இருப்பினும், அவரது வெண்கலப் பதக்கம் ஒவ்வொரு மராட்டியருக்கும் புன்னகையை வரவழைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டியம் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்றுள்ளது. ஸ்வப்னிலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் ANBUMANI RAMADOSS இந்திய அணி கனமழை தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் PMK ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது CONGRESS கொலை வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக SEEMAN NELLAI KEERTHY SURESH சட்டசபை தேர்தல் திருநெல்வேலி TAMIL ACTRESS THOOTHUKUDI தென்காசி மதுரை தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM COIMBATORE கோவை கள்ளக்காதல் ELECTION COMMISSION OPS திருமாவளவன் நெல்லை கொரோனா பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் தேவர் MADURAI THIRUMAVALAVAN நயினார் நாகேந்திரன் தீபாவளி NORTHEAST MONSOON AJITH வன்னியர் திருப்பரங்குன்றம் TAMIL CINEMA ஓபிஎஸ் விடுமுறை டாப் நியூஸ் தமிழக அரசு நாம் தமிழர் கட்சி டிரெண்டிங்