இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை விமான நிலையத்தில் தொடங்கியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, ‘இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் கமலின் புதிய தோற்றத்தை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதில், எங்கள் பொக்கிஷம். பன்முகத் திறமை கொண்ட கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் ராம்சரண் ஆகிய இரண்டு நடிகர்களின் படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். அதற்காக மாதத்தில் 12 நாட்கள் என பிரித்து வேலை செய்கிறார். அதில் ராம்சரண் படத்திற்காக சமீபத்தில் நியூசிலாந்து சென்று திரும்பினார் ஷங்கர். அங்கு அந்த படத்திற்கான பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கியுள்ளனர். 20-ஆம் தேதி வரை சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதை முடித்துக் கொண்டு மீண்டும் ராம்சரண் படத்திற்கு செல்வார் ஷங்கர்.
சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஷங்கர் இயக்கிய இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்களும், பின்னணி இசையும் படத்தை உயர்த்திப் பிடித்தன.
முதல்பாகத்தில் சேனாபதி, சந்த்ரு என்ற 2 கேரக்டரில் கமல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா கேரக்டர்கள் நிறைவான நடிப்பைத் தந்தன.
இந்தியன் தாத்தா தான் உயிரோடு இருப்பதாக வெளிநாட்டில் இருந்து போன் செய்து தகவல் அளிப்பார். அத்துடன் படம் நிறைவு பெற்றிருக்கும். இந்நிலையில் அடுத்த பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!