POLLING FLAMES

 

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு!

1 year ago 23 ஆகஸ்ட் 2024 02:37 AM | views : 221
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கடந்த 19-ந்தேதி சிவராமன் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயற்சித்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு மாவு கட்டு போடப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் திடீரென சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல நேரில் விசாரணை நடத்தி உரிய பரிந்துரைகள் அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைத்தார்.

சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில் "மாணவி பலாத்கார வழக்கில் கைதாகி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் அவர் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.இந்த நிலையில், தற்போது தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு சிவராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

தற்போது சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடார்" நேற்று விளக்கம் அளித்திருந்தார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா வன்னியர் ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை