சென்னை: ஹேமா கமிட்டி போலவே தமிழ்த் திரையுலகிலும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி விசாரிக்க கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கிறார்.
மலையாளப் படம் ஒன்றில் தான் நடித்த போது அங்கிருந்த கேரவனில் ரகசிய கேமராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள் என நடிகை ராதிகா சொல்லியிருந்த விஷயம் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக கேரள காவல்துறையினரிடம் அவர் புகார் கொடுத்திருக்கிறார் எனவும், சிறப்பு விசாரணை குழுவினர் ராதிகாவிடம் தொலைபேசி மூலம் விசாரித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், தான் புகார் கொடுக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்துவதற்காகவே தன்னிடம் அவர்கள் பேசியதாகவும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் ராதிகா.
இதுபற்றி ராதிகா இன்றைய செய்தியாளர்களை சந்திப்பில் மேலும் பேசியிருப்பதாவது, “கமிட்டி அமைக்க வேண்டிய அளவுக்கு தமிழில் அக்கிரமங்கள் நடக்கிறது என்பது அர்த்தமில்லை. இன்று நிறைய படித்தவர்களும் தைரியமானவர்களும் இந்தத் துறையில் இருக்கிறார்கள். நம்பிக்கையுடனும் ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்கள். இருந்தாலும் இரண்டாவது இடத்தில் இருக்கும் கேரக்டர் ஆர்டிஸ்ட் போன்றவர்களுக்கு பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
என்னை ஏன் அப்போதே சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். அப்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டேன். மோகன்லால் சார், “என் செட்டில் நடந்ததா?” என்று கேட்டார். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று அவரிடம் சொல்லி விட்டேன். பெரிய நடிகர்கள் அங்கு இல்லை என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான இடமாகவே ஹேமா கமிட்டியை பார்க்கிறேன்.
இதை எல்லாம் சரி செய்வதற்காகவே இப்போது நான் பேசினேன். கோலிவுட்டிலும் ஹேமா கமிட்டி போல ஒரு கமிட்டி அமையும் என்றால், அது பற்றி நடிகர் விஷால் என்னிடம் கேட்டால் அவருக்கு அறிவுரை தரத் தயார். பெண்கள் பிறவியிலேயே வலிமையானவர்கள். ஆனால், எதோ ஒரு வகையில் எங்களை பின்னே தள்ளி விட்டார்கள். இப்போது வரை நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!