இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறுகிறது. அதில் சமீபத்தில் பாகிஸ்தானை முதல் முறையாக தோற்கடித்தது போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேசம் சவால் விடுத்துள்ளது. ஆனால் கடந்த 12 வருடங்களாக இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
எனவே சவால் விடுத்து வரும் வங்கதேசத்தை துவம்சம் செய்து இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.
கடந்த 1916இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் இந்தியாவின் ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த மைதானமாகும். தற்போது 38000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றில் 34 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அந்த 34 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 15 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
11 போட்டிகள் டிராவில் முடிந்தன. 1 போட்டி சமனில் முடிந்தது. வங்கதேசத்தை முதல் முறையாக இப்போது தான் சென்னையில் இந்தியா எதிர்கொள்கிறது. மேலும் ஒட்டுமொத்த வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 13 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 11 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2 டிராவை சந்தித்துள்ளது. சென்னை மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா : 759-7 இங்கிலாந்துக்கு எதிராக, 2016
சென்னை சேப்பாக்கத்தில் இப்போட்டி நடைபெறும் 5 நாட்களும் மேகமூட்டத்துடன் கூடிய வெப்பமான சூழ்நிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.
பொதுவாக சேப்பாக்கத்தில் சுழலுக்கு சாதகமான கருமண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகும். ஆனால் டிசம்பரில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்கு இந்தியா தயாராக இப்போட்டியில் செம்மண்ணால் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலையில் நல்ல வேகம் பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே முதல் 2 – 3 நாட்கள் சூழ்நிலையை அறிந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே காலகட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் சவாலை கொடுப்பார்கள். ஆனால் போட்டி செல்ல செல்ல ஸ்பின்னர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். 347, 337, 243, 154 என்பது இங்கு 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும்.
வரலாற்றில் இங்கே 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 10 முறை 2வதாக பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!