சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.
இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இதன்படி தலா ரூ. 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலங்களில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி.யும், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ,`15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரை இதற்கு மேலும் சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த வழக்கை நடத்திமுடிப்பதற்கும் காலதாமதம் ஆகும்.
எனவே இரண்டையும் கருத்தில்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும், செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் வெவ்வேறானது.முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைப் போல செந்தில் பாலாஜி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்றார்.
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!