ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், த. செ. ஞானவேல் இயகத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். லைகா தயாரிப்பில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே, நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வேட்டையன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் என்பதால், திரையரங்குகள் நேற்று விழாக்கோலம் பூண்டன. போலி என்கவுன்டர் மற்றும் கல்வி வியாபார பொருளாக்கபப்டுவதை மையப்படுத்தி வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரஜினிய்ன் மாஸ் மசாலா, த. செ. ஞானவேலின் சமூக கருத்து கலந்த படமாக வேட்டையன் திரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சாக்னில்க் இணையதளத்தின் தகவல்களின்படி, இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் சுமார் 30 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதில் தமிழ் வெர்ஷனின் ரூ.26.15 கோடியும், தெலுங்கு வெர்ஷனின் ரூ.3.2 கோடியும், இந்தியில் ரூ.60 லட்சமும் மற்றும் கன்னட வெர்ஷன்ல் ரூ.5 லட்சமும் அடங்கும். இந்தியாவில் வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சர்வ சாதாரணமாக 40 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறவில்லை. அதேநேரம், சர்வதேச வசூல் தொடர்பான முழுமையான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
விடுமுறை அல்லாத நாள் மற்றும் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு புறப்படும் முனைப்பில் இருந்ததால், வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என கூறப்படுகிறது. ஆனால், இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் வேட்டை சூடுபிடிக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு நிலவரங்களும் இதையே பறைசாற்றுகின்றன.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் தி கோட். இந்தியாவில் இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 45 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் சுமார் 15 கோடி வரை குறைவாகவே முதல் நாளில் வசூல் செய்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், வேட்டையன் திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாததே படத்தின் வசூல் குறைய காரணம் என கூறப்படுகிறது.
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
ஈரோடு, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இருந்து வருகிறார். மேலும் இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும். தற்போது கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பதுடன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும்
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூர் அருகே பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில்
தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை, எழுகிணறு, வள்ளலார் வசித்த வீட்டில் சன்மார்க்க கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்றி வைத்து, சிறப்பு வழிபாடு மற்றும் திருவருட்பா 6-ம் திருமுறை பாராயணம் நிகழ்வில் கலந்து கொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்ததற்கு செங்கோட்டையன் சொன்ன காரணம் சரியானதுதான் என்று சொல்லும் அதிமுகவினர், செங்கோட்டையன் சொன்னதன் பின்னணி அதுவாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்கின்றனர். ஒன்றுபட்ட அதிமுகவை, அதிமுகவினர் விரும்புகிறார்களோ இல்லையோ, பாஜக ரொம்பவே விரும்புகிறது. என்னதான் அதிமுக ஒன்றும் பிளவுபடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமாளித்து வந்தாலும் உண்மை நிலவரம் அதுவல்ல.
அதிமுக மேலும் உடைகிறதா? என்ற அதிர்வுகளை எழுப்பி இருக்கின்றனர் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா. பாஜகவுடன் இபிஎஸ் கைகோர்த்ததுதான் இந்த கோபத்திற்கும் காரணம் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை. அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வர கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.3.72 கோடி நிதியளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் இந்த
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் தவெக தலைவர் விஜய்யை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் 90 சதவிகிதம் டீல் ஓகே ஆகி இருக்கிறது. அதனால்தான் அதிமுக – தவெக கூட்டணி என்பது 90 சதவிகிதம் உறுதியாகிவிட்டது என்று தகவல் பரவியது. ஆனாலும் கூட்டணி ஒப்பந்தம் இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம்
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!