சென்னையில் பெய்த கனமழை குறித்து X தளத்தில் திமுக ஆதரவாளரான ஷர்மிளாவும், பாஜக ஆதரவாளருமான கஸ்தூரியும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கோவை, மதுரையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் நேற்றும், இன்றும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது.
இதனிடையே நேற்று பெய்த மழை குறித்து சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் பாராட்டும் முன்வைத்தனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரி திமுக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்திருந்தார். இதனிடையே விசிக எம்எல்ஏ பாலாஜியின் மனைவியும் , சமூக ஆர்வலருமான டாக்டர் ஷர்மிளா தனது X பக்கத்தில் ஒரு பதிவை போட்டார்,
அதில், மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது… முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க… ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க… நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.ஏதோ சொல்லணும்னு தோணிச்சு… சொன்னேன் என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு ரிப்ளை பதிவிட்ட நடிகை கஸ்தூரி, ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல .உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம் என பதில் கொடுத்தார்.
இதற்கு ரிப்ளை செய்த ஷர்மிளா, வந்துட்டாய்யா வரிஞ்சுகட்டிகிட்டு! சங்கிகளுக்கு பிடில் வாசிக்கிறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே! என்னேரமும் தண்ணியில இருந்தா, எல்லாமே தண்ணியாத்தான் தெரியும்.இது உங்க வீடு தாணே மேடம்! முழங்கால் அளவுக்கு கூடத் தண்ணியில்லை, இதுல முட்டி வரைக்கும் தண்ணி நிக்குதுன்னு பொய் வேற என கஸ்தூரி வீட்டையே வீடியோ எடுத்து போட்டுள்ளார். இருபிரபலங்களின் மோதலுக்கு நெட்டிசன்கள் இருதரப்பினருக்கும் ஆதரவாக எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர்.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!