POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

1 year ago 18 அக்டோபர் 2024 07:27 AM | views : 197
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் பருவமழை கை கொடுத்ததால் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து பெரியாறு பாசன பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களான 1 லட்சத்தி 5 ஆயிரத்தி 2 ஏக்கருக்கு கடந்த செப்.15ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள 45,041 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக ஜூலை 3ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் கடந்த 14ம் தேதி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லை. இதனால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே அணையிலிருந்து பாசனத்திற்கு மீண்டும் 800 கனஅடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி என மொத்தம் 869 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 56.79 அடியாக உள்ளது. அணைக்கு 971 கனஅடி நீர் வருகிறது. 3018 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. 332 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 2648 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.24 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் 7வது நாளாக நீர்வரத்து சீராகாததால் தடை தொடர்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK உதயநிதி ஸ்டாலின் PMK பாமக பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கைது தமிழகம் ரஜினிகாந்த் காங்கிரஸ் திருமாவளவன் சட்டசபை தேர்தல் கோவை CONGRESS COIMBATORE இந்திய அணி EDAPPADI PALANISWAMI UDHAYANIDHI STALIN சீமான் THIRUMAVALAVAN KEERTHY SURESH வன்னியர் கொலை பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை OPS தேவர் அமமுக INDIAN CRICKET TEAM TAMIL ACTRESS தென்காசி நெல்லை தீபாவளி AJITH ASSEMBLY ELECTIONS NELLAI PARLIAMENT ELECTION தமிழ்நாடு ஓபிஎஸ் மதுரை SURIYA கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் தூத்துக்குடி PRIME MINISTER MODI பாலியல் தொல்லை BIGG BOSS TAMIL CSK அன்புமணி NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் MADURAI விடுமுறை அஜித் மோடி சூர்யா ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல்