சென்னையில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை இயக்குகிறது.தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சென்னையில் இருந்து படிப்படியாக சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இன்றிரவு முதல் புதன்கிழமை இரவு வரை அதிகளவிலானோர் சென்னையில் இருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 11,176 சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்குகிறது.கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், மாதவரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது..
பேருந்து இயக்க விவரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி. புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம் கோயம்பத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போரூர், வந்தனாரி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக நெய்வேலி, வடலூர், சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்: வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.மாதவரம் புதிய பேருந்து நிலையம்: பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்..
பேருந்து நிலையங்களை இணைக்கும் மாநகரப் பேருந்து இயக்கம்சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களை இணைக்கும் விதமாக 300 மாநகர சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்றுமுதல் புதன்கிழமை வரை 24 மணிநேரமும் இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள்கிளாம்பாக்கத்தில், மாநகர பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியூா் பேருந்துகள் புறப்படும் இடத்துக்கு இடையே, 8 மின்சார பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். டிஜிட்டல் பலகை, ஒலிபெருக்கி மூலம் பேருந்து இயக்க விவரத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2,000 பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள், இலவச மருத்துவமனை, அவசர கால ஊா்தி, பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மைப் பணியாளா்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மாா்கள் பாலூட்ட 3 அறைகள், 140 தங்குமிடம் போன்ற பயணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்..
பிரத்யேக உதவி எண்கள் : 7845700557, 7845727920, 7845740924.அரசுப் பேருந்துகள் விவரம், புகாா் - 94450 14436ஆம்னி பேருந்துகள் புகாா் - 044 2474 9002, 2628 0445, 2628 1611.சொந்த வாகனங்களில் செல்வோருக்கு...சொந்த வாகனங்களில் செல்வோா் பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிா்த்து, திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிவட்டச் சாலை வழியாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
இருட்டு கடை அல்வாவை சுவைத்த முதல்வர்!
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!