டிசம்பர் மாதம் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனும், விஜயும் பங்கேற்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சென்னை: பிரபல தனியார் வார இதழ் சார்பாக வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் தொடர்பான புத்தகம் வெளியிடப்படுகிறது. இதற்காக சென்னையில் நடத்தப்படும் விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் மற்றும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய் இருவரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்வின்போது, புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் அதனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த வகையான விழா ஏற்பாடு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் புயலைக் கிளப்பி உள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக கொள்கைகள், கொள்கை தலைவர்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விஜய் விளக்கம் அளித்தார்.
முக்கியமாக, அவரது முதல் அரசியல் மேடை கன்னிப் பேச்சின் போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்னும் கூற்றையும் விஜய் முன்மொழிந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, விசிகவின் ஆதவ் அர்ஜூனா வரவேற்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதேநேரம், இதனை மறைமுகமாக பேசியிருக்கலாம் என்றும், பொதுவெளியில் விஜய் அறிவித்திருக்க வேண்டாம் எனவும் திருமாவளவன் கூறியிருந்தார்.
மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் என்றும், சங்பரிவார் எதிர்ப்பு தான் என்றும் கூறிய திருமாவளவன், ‘நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது’ என நான் சொல்ல முடியாது என்றும், அது அவருடைய (விஜய்) கருத்து என்றும் கூறினார்.
அப்படி என்றால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். முன்னதாக, அதிகாரப்பகிர்வு எனக் கூறியிருந்த சீமானுக்கு விஜயின் கட்சி சிவப்புக் கம்பளம் விரித்ததாக பலரும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!