POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

1 year ago 11 நவம்பர் 2024 03:52 PM | views : 190
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.

இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து எழும்பூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK தவெக AMMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கோவை கைது ரஜினிகாந்த் CONGRESS திருமாவளவன் இந்திய அணி சட்டசபை தேர்தல் தமிழகம் COIMBATORE EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION வன்னியர் அமமுக தேவர் KEERTHY SURESH கொலை வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி OPS சீமான் SURIYA NELLAI தென்காசி ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை தீபாவளி ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH BIGG BOSS TAMIL தூத்துக்குடி அஜித் அன்புமணி மதுரை திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI ELECTION COMMISSION TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை விடுமுறை சூர்யா NORTHEAST MONSOON CSK