பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அமரன் வெற்றிவிழா !

By Admin | Published in செய்திகள் at நவம்பர் 26, 2024 செவ்வாய் || views : 142

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அமரன் வெற்றிவிழா !

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அமரன் வெற்றிவிழா !

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த மனைவி ரெபெகாவாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் காதல் வாழ்க்கை குறித்தும், ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.amaran

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ள 'அமரன்' திரைப்படம் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் மிகப் பெரிய வெற்றியை இப்படம் பெற்றுள்ளது.

’அமரன்’ திரைப்படம் இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் வேட்டையனை பின்னுக்கு தள்ளி வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் அமரன் படத்தின் வெற்றி விழாவை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக வெற்றி விழா நடத்த ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அமரன் படக்குழுவினருக்கு கேடயம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிக்க தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் அவர் இந்தியா வந்தவுடன் அமரன் திரைப்பட வெற்றி விழா வேலைகளில் ஈடுபடுவார் என தெரிகிறது. மேலும் டிசம்பர் 12ஆம் தேதி அமரன் திரைப்பட வெற்றி விழா நடைபெறும் பட்சத்தில் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வெற்றி விழா குறித்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமரன் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி AMARAN SIVAKARTHIKEYAN முகுந்த் வரதராஜன் சாய் பல்லவி
Whatsaap Channel
விடுகதை :

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?

விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?

விடுகதை :

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next