INDIAN 7

Tamil News & polling

உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத விஷயம்!

03 நவம்பர் 2025 09:08 AM | views : 505
Nature

வேர்ல்ட் கப் சாம்பியன் டீமின் கேப்டன் ஒருவரில் காலில் விழுகிறார் என்றால்... அவர் யார்.? அவரை அடையாளம் தெரிகிறதா..?!
இமயம் அளவுக்கு உயர
இவ்வளவு திறமைகள் இருந்தும்,
இப்படியும் அதிர்ஷ்டம் இல்லாத ஆளா.? இவரால் ஏன் புகழ்பெற முடியவில்லை.? இவருக்கு என்னதான் தடை.?யார்தான் எதிரி.? என்று 1990 களில் துவங்கி 2000 களிலும் ஒருவரை பற்றி புரியாமல் குழம்பி முழித்தேன் என்றால்... அவர் தான் அமோல் மஜும்தார்..

தனது முதலாவது ரஞ்சி டிராபி போட்டியில், ஹரியானா அணிக்கு எதிராக பாம்பே அணி சார்பில் 260 ரன்கள் குவித்து உலக சாதனையுடன்... 1994ல் கிரிக்கெட்டில் அதிரடி எண்ட்ரி கொடுத்தவர்..

அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் ஒவ்வோர் ஆண்டும் மலை அளவுக்கு ரன்கள் குவித்தவர். "புதிய டெண்டுல்கர்", "அடுத்த சச்சின்" என்றுதான் அவரை பத்திரிகையில் புகழ்ந்து தள்ளி எழுதுவார்கள்..

ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு வரும்போதும்..."என்னது... இந்த முறையும் அமோல் மஜும்தார் செலக்ட் ஆகலையா..?!" என்கிற கேள்வி தவறாமல் இடம்பெறும்..

ஆனால், கடைசி வரைக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஒரு முறை கூட இந்திய அணிக்கு தேர்வாகி சர்வதேச போட்டிகளில் அவர் ஆடவே இல்லை என்பது இன்றுவரை யாருக்குமே விளங்காத புரியாத புதிர்.?!
2013 வரை இந்திய ஃபர்ஸ்ட் கிளாஸ் டொமாஸ்டிக் கிரிக்கெட்டில் 171 போட்டிகள் விளையாடி, 48.13 ஆவரேஜில், 11,167 ரன்கள் குவித்தார். இதில் 30 செஞ்சுரி 60 பிஃப்டி அடித்திருக்கிறார்..

இவர்தான் இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற சாம்பியன்களான இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்..
ஆம். இன்று வேர்ல்ட் சாம்பியன்களாக வானில் மின்னி ஜொலிக்கும் வைரங்களை கடந்த 2 வருடங்களாக பட்டை தீட்டிய கோச் அமோல் மஜும்தார்..
லீக் மேட்ச்களில் அதிரடியாக ரன்கள் குவித்த ஓபனிங் பேட்டர் பிரதிகா ராவல் காயம். அவரால் நடக்கவே முடியாது. வீல் சேர்தான் என்று அரை இறுதி போட்டிக்கு முன்பு திடீர் இடர் ஏற்படுகிறது..

சென்ற வாரம் வீட்டில் அமர்ந்து நம்மை போல டிவியில் வேர்ல்ட் கப் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்த ஒருவரை கூட்டி வந்து நேராக அரை இறுதியில் ஓபனிங் ஆட இறக்கினார் கோச் மஜும்தார்..

அவர் 10 ரன்னில் அவுட் ஆனார்..

ஆனாலும் மனம் தளராமல் நம்பிக்கை வைத்து அவரையே
இறுதி போட்டியிலும் ஓபனிங் இறக்கினார். 78 பந்துகளில் 87 ரன்கள். 2 விக்கெட் என்று கோப்பை வெல்ல முக்கியமான காரணமாக இருந்து ஆட்டநாயகி விருது பெற்றார் ஷிஃபாலிவர்மா..

கோச் என்றால் இப்படி இருக்க வேண்டும்.. பாராட்டுகள் & வாழ்த்துகள் அமோல்..👑👌🏻🔥💯🤩
பகிர்வு..

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஸ்மிருதியின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுளளது. இந்திய கிரிக்கெட் மகளிரணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் நடந்த உலகக்



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்