POLLING FLAMES

 

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

6 months ago 24 அக்டோபர் 2025 01:34 AM | views : 231
மும்பை:

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

நவி மும்பையில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மழை காரணமாக 44 ஓவரில் 325 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அந்த அணியின் புருக் ஹாலிடே தனியாளாகப் போராடி 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு வீராங்கனை இசபெல்லா கடைசி வரை போராடி 65 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், நியூசிலாந்து 45 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் பாமக கனமழை UDHAYANIDHI STALIN இந்திய அணி கோவை PARLIAMENT ELECTION CONGRESS தமிழகம் அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை அமமுக தமிழ்நாடு சீமான் INDIAN CRICKET TEAM கைது TAMILAGA VETTRI KAZHAGAM OPS AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH சட்டசபை தேர்தல் RAJINIKANTH நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL NELLAI கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN தீபாவளி வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தூத்துக்குடி தென்காசி அஜித் கள்ளக்காதல் தேவர் கீர்த்தி சுரேஷ் SURIYA CSK திருப்பரங்குன்றம் விடுமுறை வன்னியர் சூர்யா மதுரை