POLLING FLAMES

 

திலக் வர்மாவின் அதிரடி சாதனை! அபிஷேக் சர்மாவின் சாதனை முறியடிப்பு

4 months ago 10 டிசம்பர் 2025 02:42 PM | views : 303
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நேற்று கட்டாக் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் போது இந்திய அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் மிடில் ஆர்டரில் நான்காவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா ஓரளவு சிறப்பான இன்னிங்க்ஸை விளையாடி இந்திய அணியை நிலைப்படுத்தினார்.

இந்த போட்டியில் 32 பந்துகளை சந்தித்து விளையாடிய திலக் வர்மா 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 26 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும் அக்சர் பட்டேலுடன் இணைந்து இந்திய அணியின் இன்னிங்சை நிலைப்படுத்தினார் என்று கூறவேண்டும்.

இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 4 ரன்கள் அடித்த போது சர்வதேச டி20 போட்டிகளில் அபிஷேக் ஷர்மாவின் சாதனையை மிஞ்சி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது திலக் வர்மா 4 ரன்கள் கடந்த போது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 1000 ரன்களை எட்டினார்.

ஏற்கனவே இந்திய அணிக்காக மிக இளம் வயதில் 1000 ரன்களை டி20 போட்டிகளில் அடித்த வீரராக அபிஷேக் ஷர்மா இருந்த வேளையில் அவரது சாதனையை திலக் வர்மா முறியடித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியின் போது சர்வதேச டி20 போட்டிகளில் தனது 25 ஆவது வயதில் 1000 ரன்களை கடந்திருந்தார்,


இவ்வேளையில் தற்போது 23 வயதே ஆன திலக் வர்மா அபிஷேக் ஷர்மாவின் சாதனை முறியடித்து டி20 போட்டிகளில் இந்திய வீரராக மிகக் குறைந்த வயதில் 1000 ரன்களை கடந்த வீரராக தனது பெயரை பதிவு செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK AIADMK டிடிவி தினகரன் கனமழை ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS தமிழகம் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் PARLIAMENT ELECTION AJITH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS அமமுக KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் கைது தேவர் NELLAI கொரோனா வடகிழக்கு பருவமழை நெல்லை BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் RAJINIKANTH THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION SURIYA மதுரை கள்ளக்காதல் தென்காசி CSK சூர்யா விடுமுறை தூத்துக்குடி வன்னியர் தீபாவளி அஜித் திருப்பரங்குன்றம்