POLLING FLAMES

 

ஐபிஎல் 2021 சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல்!

4 years ago 11 அக்டோபர் 2021 05:48 PM | views : 261
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் நடப்பு ஐபிஎல் சீசனில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார்.



2012 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வருகிறார் ஹர்ஷல். ஒன்பது ஐபிஎல் சீசன்களில் பந்து வீசி உள்ள ஹர்ஷல் மொத்தம் 63 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 32 விக்கெட்டுகள் நடப்பு சீசனில் எடுத்தவை.



சென்னை அணியின் பிராவோ 2013 சீசனில் 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை அள்ளி இருந்தார். ஆனால் ஹர்ஷல் பட்டேல் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் 17-வது ஓவரில் நரைன் கொடுத்த கேட்சை நழுவவிட்டார் படிக்கல். அதை அவர் பிடித்திருந்தால் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்திருப்பார் அவர். எப்படியும் அவர் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலருக்கான Purple கேப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK AMMK TVK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK PMK இந்திய அணி காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் முக ஸ்டாலின் COIMBATORE OPS SURIYA தேவர் வன்னியர் NELLAI நெல்லை தமிழ்நாடு கைது சீமான் KEERTHY SURESH பிரதமர் மோடி அமமுக சட்டசபை தேர்தல் கொரோனா TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சூர்யா AJITH THIRUMAVALAVAN விடுமுறை தென்காசி CSK TAMILAGA VETTRI KAZHAGAM வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION நடிகை PARLIAMENT ELECTION அன்புமணி அஜித் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை மதுரை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் RAJINIKANTH கள்ளக்காதல்