தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 வயதுடைய பொறியியல் கல்லூரி மாணவி போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.தென்காசி மாவட்டமாக கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர்.
இவர்களில் வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த ர.ஸாருகலா (வயது 22) 3,336 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இதே ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள ஸாருகலா கோவை நேஷனல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து இந்த ஆண்டு முதுகலை பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வருகிறார்.இவரது தாய் சாந்தி பூலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 19 வயதில் சந்துரு என்ற தம்பி உள்ளார். தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுள்ள ஸாருகலாவிற்கு வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியைச் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளனர்.
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!