தமிழகத்தில் வருகின்ற 16 ஆம் தேதி சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதகாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆயுதபூஜை,விஜயதசமியை முன்னிட்டு 14,15 ஆம் தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில்,ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை மற்றும் அவர்களின் நலன்கருதி வருகின்ற 16-ம் தேதி சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
"பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் , 14.10.2021 மற்றும் 15.10.2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் வார இறுதிநாளான 16.10.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி 16.10.2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது ",என்று தெரிவித்துள்ளார்.
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!