பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதிசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலைசம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் தொடர்பாக டாக்டர் சுப்பையாவுக்கும், ஆசிரியரான பொன்னுசாமி தரப்புக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சுப்பையா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து போலீஸார் ஆசிரியர் தம்பதிகளான பொன்னுசாமி, அவரது மனைவி மேரிபுஷ்பம், அவர்களது மகன்கள் வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ், பேசிலின் குடும்ப நண்பரான வழக்கறிஞர் வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட கபடி வீரர் ஏசுராஜன் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் முருகன், டிப்ளமோ பட்டதாரியான செல்வ பிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பலர் கைதான நிலையில், பலர் சரண்அடைந்தனர். ஐயப்பன் மட்டும் அரசு தரப்பு சாட்சியாக அப்ரூவராக மாறினார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, குற்றம் சாட்டப்பட்ட பொன்னுசாமி அவரது மகன்களான வழக்கறிஞர் பேசில், பொறியாளர் போரிஸ் மற்றும் பேசிலின்நண்பரான வழக்கறிஞர் வில்லியம்,அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையாக செயல்பட்ட முருகன், செல்வப்பிரகாஷ் ஆகிய 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தும், மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரி விசாரணை நீதிமன்றம், இந்தவழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணையைதள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!