Tamil News & POLLING

 

சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

4 years ago
25 அக்டோபர் 2021 01:16 PM | views : 169
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி போராடுவோம் என கூறினார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாகவும், அதிமுகவில் தொண்டர் முதல் தலைவர் வரை அரசியல் நாகரீகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். அரசியலிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதை ஏற்றுக்கொள்வது மக்களின் முடிவு என கூறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை நினைவூட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் சீமான் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி PMK தமிழகம் கனமழை INDIAN CRICKET TEAM பாமக UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கைது அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION CONGRESS பிரதமர் மோடி NELLAI கொலை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI அமமுக வடகிழக்கு பருவமழை SEEMAN COIMBATORE கோவை தமிழ்நாடு தென்காசி TAMIL ACTRESS OPS TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் திருநெல்வேலி மதுரை THOOTHUKUDI சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION THIRUMAVALAVAN டாப் நியூஸ் நாம் தமிழர் கட்சி திருமாவளவன் கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு ஓபிஎஸ் வன்னியர் டிரெண்டிங் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் கொரோனா நெல்லை TAMIL CINEMA பாலியல் தொல்லை தீபாவளி MADURAI விடுமுறை தேவர் NORTHEAST MONSOON AJITH