POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தேவர் ஜெயந்திக்கு பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு!

4 years ago 26 அக்டோபர் 2021 09:26 AM | views : 191
மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகின்ற 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார். இதற்காக 166 படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பாதுகாப்பு படைகளை அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குரு பூஜையின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 12 யூனிட்டுகள் ஈடுபடுத்தப்படவுள்ளன. துப்பாக்கி, லத்தி, அடையாள அட்டையுடன் போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார். வரும் 27ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு 13.7 கிலோ எடை கொண்ட தங்கத்தாலான கவசத்தை வழங்கினார். மதுரை தனியார் வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை, ஆண்டுதோறும் அக்டோபர் 25ஆம் தேதி ஜெயந்தி விழாவுக்காக ஒப்படைப்பதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தங்கக்கவசமானது தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு அணிவித்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU AIADMK PMK பாமக முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் திருமாவளவன் ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் தமிழகம் கோவை UDHAYANIDHI STALIN கைது இந்திய அணி CONGRESS EDAPPADI PALANISWAMI COIMBATORE அமமுக KEERTHY SURESH சீமான் INDIAN CRICKET TEAM கொலை பிரதமர் மோடி OPS வன்னியர் வடகிழக்கு பருவமழை தேவர் THIRUMAVALAVAN NELLAI ASSEMBLY ELECTIONS நெல்லை தென்காசி TAMIL ACTRESS தீபாவளி AJITH மதுரை PARLIAMENT ELECTION ஓபிஎஸ் தமிழ்நாடு SURIYA பாலியல் தொல்லை அஜித் விடுமுறை NORTHEAST MONSOON CSK அன்புமணி கள்ளக்காதல் BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் MADURAI தமிழக சட்டசபை தேர்தல் TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI மோடி தூத்துக்குடி சூர்யா ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்