சின்னத்திரை ரசிகர்ளுக்கு நாள்தோறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதில் சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியலில் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சீரியல் நடிகர்கள் நடிகைகளின் வாழ்வில் நடக்கும் நிஜ நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆராவாரத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. இதில் சீரியலில் வில்லியாக நடித்து ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும், நிஜவாழ்வில் அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான்.
அந்த வகையில் சீரியலில் வில்லியாக நடித்து நிஜத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ஃபரீனா ஆசாத். பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்த இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை எல்லாம் பாராட்டாக எடுத்துக்கொண்ட ஃபரீனா தனது சிறந்த வில்லத்தனத்தை அந்த கேரட்க்டருக்கு கொடுத்தார். இவரின் நடிப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும், சமூக வலைதளங்களில் இவருக்கு ரசிககள் அதிகரிக்க தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நல்ல செய்தியை கேட்டு பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், அடுத்த சில நாட்களில் இவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட போட்டோஷூட் பலரிடமிருந்து எதிர்மறையான விமாசனங்களை பெற்றது. இந்த விமர்சனங்களுக்கு அவரும் பதிலடி கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் கர்ப்பமாக உள்ளதால் சீரியலில் இருந்து வெளியே உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனாலும் தொடர்ந்து நடித்து வந்த ஃபரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா சீரியலில் சிறைக்கு செல்வது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ஃபரீனா ஆசாத்-க்கு தற்போது அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்குவாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!