Tamil News & POLLING

 

ஜெய்பீம் பட சர்ச்சையில் தேவர் சமுதாயத்தை வம்பிழுக்கும் அன்புமணி!

4 years ago
19 நவம்பர் 2021 10:24 AM | views : 155
ஜெய்பீம் பட சர்ச்சைக்குறித்து இயக்குநர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸுக்கு எழுதிய கடிதத்துக்கு அன்புமணி பதில் எழுதியுள்ளார். ஜெய்பீம் படம் சமூகப்பிரிச்சினை அது ஜாதி பிரச்சினை அல்ல அதுகுறித்த புரிதல் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் இல்லை. அக்னி குண்டம் வைத்த காலண்டருக்குப்பதில் அய்யா தேவர் பெருமகனார் படம் வைத்திருந்தால் சும்மா இருப்பீர்களா, ஆனால் நான் அதையும் கேட்டிருப்பேன் என இயக்குநர் பாரதிராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் ஆவேசமாக கடிதம் எழுதியுள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா? ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்து தான் வந்திருக்கும் என்று இயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் ANBUMANI RAMADOSS இந்திய அணி கனமழை தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் PMK ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது CONGRESS கொலை வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக SEEMAN NELLAI KEERTHY SURESH சட்டசபை தேர்தல் திருநெல்வேலி TAMIL ACTRESS THOOTHUKUDI தென்காசி மதுரை தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM COIMBATORE கோவை கள்ளக்காதல் ELECTION COMMISSION OPS திருமாவளவன் நெல்லை கொரோனா பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் தேவர் MADURAI THIRUMAVALAVAN நயினார் நாகேந்திரன் தீபாவளி NORTHEAST MONSOON AJITH வன்னியர் திருப்பரங்குன்றம் TAMIL CINEMA ஓபிஎஸ் விடுமுறை டாப் நியூஸ் தமிழக அரசு நாம் தமிழர் கட்சி டிரெண்டிங்