Tamil News & POLLING

 

அதிமுகவை வழி நடத்துவதே என் ஆசை: அதிமுக பிரமுகரிடம் சசிகலா பேச்சு

4 years ago 09 ஜூன் 2021 06:47 AM | views : 159
ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் வின்சென்ட் ராஜாவிடம் சசிகலா மொபைல் போனில் நேற்று பேசினார். இந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததால் முக்குலத்தோர் வாக்கு வங்கியை இழந்துவிட்டோம். இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. தற்போது கட்சி தலைமை இல்லாமல் இருக்கிறது. தலைமை ஏற்பதற்கு வரவேண்டும் என வின்சென்ட் ராஜா சசிகலாவிடம் கூறியுள்ளார்.



அதற்கு, வருவேன், எல்லாருடைய மனக்குமுறலும் தெரிகிறது, நானும் மன வருத்தத்தில்தான் உள்ளேன். தொண்டர்களுக்கு கடிதம் எழுதலாம் என்றால், கரோனா காலமாக இருப்பதால் கடிதம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அதனால்தான் ஒவ்வொருவரிடமும் போனில் பேசி வருகிறேன் என சசிகலா பதிலளிக்கிறார்.

உங்களிடம் பேசியதற்கு என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை. கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காலம் அதிமுகவைப் பாதுகாக்க வேண்டும் என்றால் உங்களைப்போன்ற தலைமை வேண்டுமென வின்சென்ட் ராஜா கூறுகிறார்.

அதையடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து இந்த கட்சியை நல்ல முறையில் வழிநடத்தி, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சசிகலா கூறுகிறார்.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி சீமான் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் PMK தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி ரஜினிகாந்த் கனமழை பாமக INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION CONGRESS கைது அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI அமமுக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை SEEMAN NELLAI கொலை OPS தமிழ்நாடு THIRUMAVALAVAN மதுரை TAMIL ACTRESS கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை COIMBATORE திருமாவளவன் திருநெல்வேலி கோவை தென்காசி ELECTION COMMISSION டாப் நியூஸ் TAMIL CINEMA தமிழக அரசு நாம் தமிழர் கட்சி தீபாவளி ASSEMBLY ELECTIONS ஓபிஎஸ் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON வன்னியர் தேவர் நயினார் நாகேந்திரன் விடுமுறை AJITH டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் THOOTHUKUDI MADURAI திருப்பரங்குன்றம்