திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எஸ்.பி. யிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ராணிப்பேட்டை ஆசிரியர் காலனியில் வசிக்கும் ஆயர் மூலம் சென்னையை சேர்ந்த அவரது உறவினர் பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இவருக்கும் எனக்கும் கடந்த 4.12.2019 அன்று திருமணம் நடந்தது. எங்களுக்கு சிஎஸ்ஐ ஆயர் திருமணத்தை நடத்தி வைத்தார்.
நர்சிங் படித்துள்ள எனது மனைவி, சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் எனது மனைவி என்னிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, ஆயருடன் அடிக்கடி காரில் சென்று வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்தபிறகும் அவர் ஆயருடன் பல மணிநேரம் செல்போனில் பேசுவார்.
என்னுடன் இல்லற வாழ்வில் ஈடுபடுவதை தவிர்த்து வந்தார். அவரை தொட முயற்சித்தாலும் என்னை தாக்கி விரட்டுவார்.
கடந்த 2020, ஜனவரி 14, 15, 16ம் தேதிகளில் முகாம் பணிக்கு போகவேண்டும் எனக்கூறிவிட்டு ஆயருடன் வெளியே சென்று தங்கினார்.
இதையறிந்த நான் எனது மனைவியிடம் கேட்டபோது, ‘திருமணத்திற்கு முன்பே அவருடன் உறவில் இருந்தேன். இனி நான் துண்டித்து கொள்கிறேன்’ என்று எனது மனைவி கூறினார்.
ஆனால் துண்டித்து கொள்ளவில்லை.
இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனது கை விரல் கூட படாத நிலையில், கடந்த 13.10.20 அன்று எனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து கேட்டபோது, குழந்தைக்கு தந்தை ஆயர்தான் என்கிறார்.
இதை போலீசில் கூறினால், வரதட்சணை கேட்பதாக உன் மீதும், உன் பெற்றோர் மீதும் புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன் என்று மனைவி மிரட்டுகிறார்.
இதனால் மனவேதனை அடைந்த நான், விவாகரத்து கோரி வேலூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். இதனால் என்னையும் என் குடும்பத்தினரையும் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
எனவே ஆயர் மற்றும் எனது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகாரை கேட்டு எஸ்.பி. அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!