தங்கள் நாட்டிற்கு இந்திய குடிமக்கள் நேரடியாக செல்ல தடை விதித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மட்டும் எப்படி சென்றார். மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு கூட அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை என்பதால் எப்படி , ஏன் அமெரிக்கா சென்றார் என்பதை ரஜினிகாந்த் சார் தெளிவுபடுத்த வேண்டும் என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்(வயது 70) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். உடல் நலனை காரணம் காட்டி அரசியலில் இறங்கவில்லை. ரஜினி அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபத்தல் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டது.
இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.. மகள் ஐஸ்வர்யாவும் ரஜினிகாந்த் உடன் சென்றுள்ளார். ரஜினி அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார். அவர் தனது பதிவில், மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் (கொரோனா காரணமாக) இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நேரத்தில் ரஜினிகாந்த் எப்படி, ஏன் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து பின்வாங்கினார், இப்போது எப்படி இந்த பயணம் சாத்தியமானது ... தெளிவான தகவல்கள் இல்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.
தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் பணிபுரியும் அல்லது படிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும்.
ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள்- இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல்நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான சோதனை என்று சொன்னார்கள்? மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறேனோ, அவ்வளவு மோசமாக இருக்கிறது.
மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம். அது மிகப்பெரிய விஷயம். அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" இவ்வாறு கஸ்தூரி சங்கர் தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கதை துவங்குகிறது. துறைமுகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரும் முதலாளியான சைமன் (நாகர்ஜூனா) கப்பல்வழி இறக்குமதியைப் பயன்படுத்தி கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வலது கையான சௌபின் சாகீர் கூலிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து பிரச்னைகள் வந்தால் அவர்களைக் ‘காலி’
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!