INDIAN 7

Tamil News & polling

1000 கோவில் கட்டுவதை விட ஒருவருக்கு கல்வி கொடுப்பது மேல் : நடிகர் சூரி

04 ஆகஸ்ட் 2022 08:47 AM | views : 65
Nature

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து பேசிய சூரி, "மதுரை மீனாட்சி அம்மன் அருளால் எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன். சூர்யா, கார்த்தி ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் வந்தாலே தாங்காது. இதுல ரெண்டு பேருமே மதுரைக்கு வந்துருக்காங்க, அப்படின்னா சொல்லவா வேணும். மதுரை ரசிகர்கள் சார்பாகவும், என்னுடைய ரசிகர்கள் சார்பாகவும் சூர்யா அண்ணனுக்கு தேசிய விருது கிடைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



திரைத்துரையில் சூர்யா அண்ணனின் உழைப்பும், நடிப்பும் தொடர்ந்து பேசப்பட்டு கொண்டே இருக்கும். ஆனால் அதை அனைத்தையும் தாண்டி ஒரு ஏழை மக்களுக்கு ஒரு படிப்பு கொடுத்தால் அதை விட பெரிய விஷயம் இல்லைன்னு சொல்லுவாங்க. 1000 கோவில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை மிக சிறப்பாக செயல்படுத்தி வரும் சூர்யா அண்ணனுக்கு நன்றி. இது வரைக்கும் உங்கள யாரும் அசைக்க முடியாது அண்ணே” எனக் கூறியுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்