POLLING FLAMES

 

தனி நீதிபதி விலகியதை கொண்டாடிய ஓ.பி.ஸ்!

3 years ago 06 ஆகஸ்ட் 2022 04:06 PM | views : 227
பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் மன்னிப்பு கோரப்பட்டது. தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர். அதை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். வேறு நீதிபதியை நியமிக்கும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரையும் செய்தார்.

புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனி நீதிபதி விலகியதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலைத்தளங்களில் பதிவேற்றி கொண்டாடினர். பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறும் வீடியோ காட்சி, தனி நீதிபதி விலகல் என்ற அறிவிப்பு ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் AIADMK டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK முக ஸ்டாலின் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக UDHAYANIDHI STALIN கோவை CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கொலை அமமுக தமிழ்நாடு INDIAN CRICKET TEAM சீமான் AJITH KEERTHY SURESH OPS கைது பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் நெல்லை RAJINIKANTH NELLAI தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தீபாவளி கொரோனா THIRUMAVALAVAN TAMIL ACTRESS ஓபிஎஸ் வன்னியர் மதுரை CSK அஜித் தேவர் தென்காசி தூத்துக்குடி சூர்யா திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் விடுமுறை கள்ளக்காதல் SURIYA ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை