பசும்பொன் தேவர் மீசை மறைந்த ரகசியம் !!!
ஆண்களுக்கு மீசை தான் அழகு என்பது தமிழர்களின் கலாச்சாரம் !
தமிழர்களின் வீரத்தை பிரதிபலிப்பதும் இந்த அழகான மீசை தான் !
நட்பை உயிரினும் மேலாக எண்ணி வெள்ளையனை எதிர்த்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத் துரையின் உயிரைக் காப்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்து வாளேந்தி போராடி தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணத்தை ஏற்றுக் கொண்ட அந்த மருது சகோதரர்களின் அடையாளமே அந்த அழகான மீசை தான்.
தனி மன்னனாக போர்க்களத்தில் களம் கண்டு வெள்ளையர்களை அடித்துத் துரத்திய அந்த புலித் தேவனுக்கும் பெருமை சேர்த்தது அந்த முறுக்கு மீசை தான்.
இப்படி தமிழர்களின் வீரத்தின் அடையாளமே அற்புதமான அந்த மீசை தான் இன்னும் சொல்லப் போனால் தமிழர்களின் அழகை மெருகூட்டிக் காட்டுவதே அந்த இளமை ததும்பும் இனிய மீசை தான்.
வாலிப பருவத்திலே பசும்பொன் தேவருக்கும் இப்படியொரு அழகான மீசையும் இளமையை பிரதிபலிக்கும் செழுமையான முடியழகும் இருந்தது உண்மை தான்.
இப்படி அரும்பு மீசையும் அழகான கிராப்புடன் காணப்பட்ட பசும்பொன் தேவர் மகன் ஒரு நாள் திடீரென மீசைக்கு விடை கொடுத்துவிட்டார்.
அழகான முடியுடன் கிராப்பு வைத்திருந்த தனது முடி அழகை மாற்றி பாகவதர் சிகை அலங்காரத்திற்கு தன்னை திடீரென மாற்றிக் கொண்டார்.
ஏன் இந்த மாற்றம் ? பலருக்கும் இதற்கான விடை தெரியவில்லை பசும்பொன் திருமகனாரும் இது பற்றி வாய் திறந்து எதுவும் பேசவில்லை வாய் மூடி மௌனமாகவே இருந்தார்.
சில ஆண்டுகள் கழித்து பசும்பொன் திருமகனார்க்கு நெருங்கிய ஒருவர் தைரியத்தை வர வழைத்து அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
உங்கள் அழகுக்கு அழகு சேர்த்ததே! உங்களது அழகான மீசையும் உங்கள் முடியழகும் தான்.
அப்படியிருக்கும்போது ஏன் அந்த அழகான மீசையை எடுத்து விட்டு கிராப்பு முடியை பாகவதர் முடியாக மாற்றினீர்கள்?
என்று கேட்டார். அப்போது தான் திருமகனார் தனது மௌனத்தைக் கலைத்தார்.
ஒரு முறை தேவர் திருமகனார் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு தனது நெருங்கிய நண்பர் ஏற்பாடு செய்திருந்த ஒரு வீட்டில் தங்கினார். அப்போது அழகான மீசையும் சுருட்டுத் தலை முடியும் அவரிடம் இருந்தது. இரவு 10 மணியளவில் அவர் அறையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்த போது அங்கே ஓர் அழகான கேரளா இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். திருமகனார் தங்கியிருந்த அந்த வீட்டைச் சேர்ந்தவள் அந்தப் பெண்.
அந்தப் பெண் திருமகனாரைப் பார்த்துச் சொன்னாள்! நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவளது ஆசையை தெரிவித்தார்.
அப்போது தேவர் திருமகனார் சொன்னார் அம்மா! நான் ஒரு ஆன்மீகவாதி!
எனக்கு திருமண வாழ்க்கை என்பது கிடையாது ! எல்லாப் பெண்களையும் நான் பராசக்தி வடிவமாக பார்ப்பவன். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் ! என்று அவளுக்கு அறிவுரை கூறி அவளை அனுப்பி வைத்தார்.. மனம் மாறிய அந்தப் பெண் புறப்பட்டுச் செல்லும் போது அவளை மீண்டும் அழைத்து திருமகனார் ஒரு கேள்வி கேட்டார்.
அம்மா ! என்னை நீ ஏன் விரும்பினாய்? என்னிடம் உன்னை கவர்ந்த அம்சம் என்ன? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் உங்கள் அழகான மீசையும் உங்கள் முடியழகும் தான் 'என்னைக் கவர்ந்தது' என்றாள் அந்தப் பெண்.
உடனே மறுநாளே தனது மீசையை எடுத்து விட்டு வாலிப முடி ஸ்டைலை மாற்றி வயோதிக பாகவதர் ஸ்டைலுக்கு தனது முடியை மாற்றியமைத்தார்.
அதற்கு திருமகனார் விளக்கம் கூறும்போது உண்மையான பிரம்மச்சாரியம் என்பது நாம் ஒரு பெண்ணை பார்க்காமல் இருப்பது மட்டுமல்ல! வேறு எந்தப் பெண்ணும் தன்னைப் பார்க்காமல் இருக்குமளவிற்கு தன் அழகைக் குறைத்துக் கொள்பவன் தான் உண்மையான பிரமச்சாரி. அதனால் தான் நமது முனிவர்களெல்லாம் நீண்ட தாடி வளர்த்து எந்தப் பெண்ணும் தன் மீது விருப்பப் படக்கூடாது என்பதற்காக தான் அழகாக தோற்றமளிக்காமல் காட்சியளித்தனர். இது தான் பசும்பொன் திருமகனார் தன் மீசையை துறந்ததற்கான காரணம் பற்றி கொடுத்த விளக்கம்.
தவத்திலே மிகவும் வலிமையான விசுவாமித்ரரே மேனகை என்ற நடன அழகி தன் எதிரே வந்தவுடன் அவள் அழகில் மயங்கி தனது தவத்தை கலைத்து விட்டுச் சென்றதாக இதிகாசம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது அழகான பெண் தன்னைத் தேடி வந்தும் அவளுக்கு அறிவுரை கூறி அவளை திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவள் விரும்பிய தனது அழகையே மாற்றி அமைத்துக் கொண்ட ஒரு அபூர்வ மனிதர் திருமகனார் அவர்கள்.
ஆனால் தனது கொள்கையை தேவர் திருமகனார் மற்றவர்களிடம் திணித்ததில்லை. மறைந்த மதிப்பிற்குரிய மூக்கையா தேவரின் நெருங்கிய நண்பர் எனது தந்தையார். என்னை அடிக்கடி அவரிடம் என் தந்தையார் பல முறை அழைத்துச் சென்றிருக்கிறார். திருமகனார்க்கு மிகவும் நெருக்கமானவர் திரு.மூக்கையா தேவர் அவர்கள் அப்போது அவர் சொன்ன விஷயம்.
"மற்றவர்கள் மீசை வைத்ததை திருமகனார் எப்போதும் எதிர்த்ததில்லை அதனால் தான் நானே மீசை வைத்திருக்கிறேன்!" என்பார்.
அதனால் நீங்கள் அனைவரும் அழகான மீசை வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் எந்தத் தவறும் இல்லை காரணம் பெரிய மீசை தான் தமிழனின் கலாச்சாரம் ! தமிழர்கள் வீரத்தின் அடையாளம். தேவர் திருமகனாரும் அதை எதிர்த்ததில்லை. அவர் மீசையை துறந்ததற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
நன்றி !
இது போன்று நேதாஜி பசும்பொன் தேவர் திருமகனார் பற்றிய பல கட்டுரைகளும் சமுதாய விழிப்புணர்வை உருவாக்கும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவரும்.
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!