பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் ஜிபி முத்து ஃபைனல்ஸ் வரை செல்வார் என ரசிகர்கள் நம்பினர் ஆனால் பல்வேறு தனிப்பட்ட காரணங்களால் ஜிபி முத்து பாதியிலே நிகழ்ச்சியை விட்டு விலகினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது.
அதற்கு காரணம், நேற்றைய தினம் இணையத்தில் வெளியான புகைப்படம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பட் ஹிட் சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜிபி முத்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சொல்ல முடியாது இந்த சீரியலில் ஜிபி முத்து கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் என ரசிகர்கள் யூகித்துள்ளனர். ஆனால் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்ப்பு வெளியாகவில்லை. அதன் பின்பே உண்மை என்ன? என்பது ரசிகர்களுக்கு தெரிய வரும்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S