டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவமனை முன்பாக எய்ட்ஸ் நோய் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மனிதர்களை அச்சுறுத்தும் தீவிர நோயான எய்ட்ஸ் நோய் பற்றிய தீவிரத்தையும் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு முதல்முறையாக டிசம்பர் ஒன்றாம் தேதியை எய்ட்ஸ் தினமாக அறிவித்தது.
1998 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டிசம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை பிரச்சாரங்கள் மூலமும் ஊர்வலம் மூலமும் கலை நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பாக இன்று கல்லூரியின் உதவி மருத்துவ நிலை அலுவலர் ஈஸ்வரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து நுழைவாயில் இருந்து வளாகப் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனை வரை செவிலியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டிமருத்துவமனை முன்பாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!