இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுமா? - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

  டிசம்பர் 26, 2022 | 07:56 am  |   views : 1684


கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில் தற்போது சீனாவில் புதியவகை கொரோனா பிஎஃப் 7 (Omicron BF.7) வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7 (Omicron BF.7) புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால், மீண்டும் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முழு வீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.இந்த நிலையில் மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவைச் சேர்ந்த டாடா மருத்துவம் மற்றும் நோயறிதல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர் ரவி, “இந்தியாவை பொறுத்தவரை பிஎஃப்.7 வைரஸால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே அறிகுறிகள் தென்படும்” என்று தெரிவித்தார்.இந்த புதிய வைரஸானது லேசான வடிவத்தில் மாறியுள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், “இந்தியர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்” என்று குறிப்பிடுகிறார்கள்.

Also read...  பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

மேலும், பிஎஃப் 7 வைரஸ் அதிகரித்தால் அதனை கொரோனா பெருந்தொற்றும் அலை என்ற சொல்லால் வரையறுக்க முடியாது. ஒரு அலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து உச்சத்தை தொட்டு மீண்டும் குறைந்துவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!

2023-09-09 02:35:20 - 2 weeks ago

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..! ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது; 2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்


முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?

2023-09-21 04:25:08 - 2 days ago

முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன? தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன? மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.. நான் பேட்டி எடுத்த பல


பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

2023-09-20 14:27:50 - 2 days ago

பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை! அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம் 9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்


திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!

2023-09-20 16:42:13 - 2 days ago

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை! ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு