குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.
1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த பழைய கார் 73 வருட பாரம்பரியம் கொண்டது. அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை பயணம் சென்று லண்டனை அடைந்துள்ளனர். 2½ மாத பயணம் மேற்கொண்ட அந்த குடும்பத்தினர் கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனை அடைந்த போது தங்களது வெற்றிப்பயணம் தொடர்பாக ஒரு வீடியோ தயாரித்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுடன் தமன் தாக்கூரின் பதிவில், இது மிகவும் உணர்ச்சிகரமான பயணம். 73 நாட்களில் 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்கள் பயணத்தின் போது பல்வேறு இடங்களிலும் எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!