POLLING FLAMES

 

துருக்கி நிலநடுக்கம்- 248 மணி நேரத்துக்கு பிறகு 17 வயது சிறுமி உயிருடன் மீட்பு

3 years ago 16 பிப்ரவரி 2023 04:01 PM | views : 249
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்கு பிறகு, கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை துருக்கி மீட்புக்குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர்.

அவருக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. மீட்புக்குழுவினரை சிறுமியின் மாமா கட்டிப்பிடித்து நன்றி கூறினார்.மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அலி அக்டோகன் தெரிவித்தார். இந்த கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருள்ள ஒன்றை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது ஒரு பூனையாக இருந்தாலும் கூட மகிழ்ச்சி அடைவதாக அலி அக்டோகன் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி ரஜினிகாந்த் PMK ANBUMANI RAMADOSS AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI AJITH கொலை COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION கைது தமிழ்நாடு சீமான் OPS KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக RAJINIKANTH TAMIL ACTRESS கொரோனா தேவர் ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் நெல்லை NELLAI BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN மதுரை ELECTION COMMISSION விடுமுறை திருப்பரங்குன்றம் வன்னியர் தீபாவளி கள்ளக்காதல் அஜித் சூர்யா தென்காசி CSK SURIYA வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி