சண்டிகர் : அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் (25), ஜூனைத் (35) என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருவரையும் நேற்று முன்தினம் ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்திருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ. பகுப்பாய்வுக்கு பிறகு அவர்கள் யார் என்பது தெரிய வரும் என்றனர்.இதற்கிடையே வாலிபர்கள் சாவில் பசு காவலர்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பாக 5 வழக்கு இருப்பதாகவும் நசீர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரில் மோனு மானேசர், பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்.
உருவம் இல்லாதவன் சொன்னதைத் திரும்பச் சொல்லுவான் அவன் யார்?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!