புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் (வயது 72). இவர் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனி அறையில் மின் விசிறி கொக்கியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
உடலைப்பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.வில்லியனூர் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடராஜன் குடும்ப பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரிவர யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.நடராஜன் 1991, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைராகவும் பதவி வகித்தார். புதுவை மாநில அ.தி.மு.க. மாநில செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சரவணன், முருகமணி ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!