கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்கக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பகுதியில் அவர், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது” என பதிவிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கொடுத்த பேட்டியில் ஏற்கனவே இருந்த பிரச்னையில் திருமாவளவன் நடந்துகொண்ட விதத்தில் என் மனதில் உயர்ந்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது 🙏
வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி.
மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு 🙏
.@thirumaofficial pic.twitter.com/3dDB01sxGF
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 21, 2023
மேலும் இந்த சந்திப்பிற்கு பிறகு காயத்ரி ரகுராம், கடந்த காலத்தில் திருமாவளவனை பற்றி பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!