கோவில்பட்டி : பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகியோர் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த விவகாரம் பாஜக-அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் மாநில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்ததை கண்டித்து, எடப்பாடியின் படம் எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த விவகாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S