திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் டி.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது56). ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ஜோதிடராக இருந்து வருகிறார்.
பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதால் அந்த பகுதியில் பிரபலமாக இருந்திருக்கிறார். இவரது நண்பர் ஒருவர் வைக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் அவர்களது வீட்டுக்கு சுதர்சனன் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.ஜோதிடரின் நண்பருக்கு 15 வயதில் ஒரு மகளும், மகனும் உள்ளனர். தந்தையின் நண்பர் என்பதால் ஜோதிடரின் வீட்டுக்கு சிறுவன்-சிறுமி இருவரும் அடிக்கடி சென்று வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் இருவரையும் ஜோதிடர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.அவர்களும் வழக்கம் போல் ஜோதிடரின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது சிறுவனை இறைச்சி வாங்கி வருமாறு கூறி வீட்டில் இருந்து வெளியே ஜோதிடர் அனுப்பியிருக்கிறார். சிறுவன் சென்றபிறகு, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.அதனை குடித்த சிறுமி சிறுது நேரத்தில் மயங்கி விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து சிறுமியை தனது வீட்டுக்குள் தூக்கிச்சென்ற ஜோதிடர் சுதர்சனன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்றிருந்த சிறுவன் திரும்பிவந்ததும், அறையில் இருந்த சிறுமியை மயக்கம் தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஜோதிடர் சுதர்சனன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. அதனை காண்பித்து சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஜோதிடர் மிரட்டியதால், அதுபற்றி தனது பெற்றோர் உள்ளிட்ட யாருக்கும் சிறுமி தெரிவிக்காமல் இருந்துள்ளார்.ஆனால் ஜோதிடரின் அத்துமீறல் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருந்துள்ளது.
இதனால் உடலளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனது நிலை குறித்து தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். அதனை அவர்கள், சிறுமி படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சிறுமியின் தாயை அழைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை விளக்கினர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், ஜோதிடர் சுதர்சனனிடம் சென்று கேட்டுள்ளனர்.அப்போது தன்னிடம் உள்ள சிறுமியின் படுக்கையறை படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியிருக்கிறார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சைல்டுலைன் அமைப்பு மற்றும் வைக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மாஜிஸ்திரேட்டு முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து ஜோதிடர் சதர்சனனை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.தந்தையின் நண்பர் என்பதை பயன்படுத்தி சிறுமியிடம் ஜோதிடர் சுதர்சனன் அத்துமீறியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!