POLLING FLAMES

 

விஜய் படத்திற்கு வாழ்த்து சொன்ன அஜித் !

2 years ago 09 ஆகஸ்ட் 2023 12:24 PM | views : 247
விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன. இன்னும் லியோ படமே ரிலீஸ் ஆகாத நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. முதலில் இந்த படத்தை அட்லீ இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த பட்டியலில், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜின் பெயரும் அடிபட்டது.

இந்நிலையில் ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

பொதுவாகவே வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே சற்று வித்யாசமாகவே இருக்கும். சென்னை 28 படத்தில் துவங்கி தன் ஒவ்வொரு படங்களிலும் ஏதேனும் வித்யாசமான விஷயங்களை வெங்கட் பிரபு முயற்சித்து வருகிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார் என்றவுடன் இப்படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது தளபதி 68 படத்தில் அவருக்கு தம்பியாக நடிகர் ஜெய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் விஜய் 68 க்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்துத் தெரிவித்தாரா? எனப் பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு வெங்கட் பிரபு, ‘முதல் வாழ்த்தே அஜித் சாரிடமிருந்துதான் வந்தது’ எனப் பதிலளித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU ANBUMANI RAMADOSS PMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் கனமழை பாமக இந்திய அணி PARLIAMENT ELECTION தமிழகம் CONGRESS கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை COIMBATORE திருமாவளவன் AJITH தமிழ்நாடு KEERTHY SURESH OPS பிரதமர் மோடி கைது TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் அமமுக INDIAN CRICKET TEAM தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் NELLAI BIGG BOSS TAMIL TAMIL ACTRESS நெல்லை கொரோனா THIRUMAVALAVAN SURIYA வன்னியர் விடுமுறை மதுரை ELECTION COMMISSION தூத்துக்குடி CSK சூர்யா தீபாவளி தென்காசி தேவர் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை அஜித் RAJINIKANTH திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ்