டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்! சிறிய கட்சிகளை குறிவைக்கிறார்!
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இந்த வருடம் இதற்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் சீமான் ஆகிய தலைவர்களுக்கு வாழ்த்து சொன்னது சற்று கவனிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறிய கட்சிகளை நடிகர் விஜய் ஒருங்கிணைப்பது போல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோயில்களில் அன்னதானம் வழங்கினர். மேலும், ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்தனர். பிறந்தநாளையொட்டி டிடிவிதினகரனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "எனது பிறந்தநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சரும் அன்புச் சகோதரருமான திரு.ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சரும் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம், திரைப்பட நடிகர் தளபதி விஜய், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத் தம்பி ரவீந்திரநாத், தமிழ்நாடு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் D.கணேசன், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆகியோர்களுக்கும் மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்" என்று கூறினார்.
பகிரவும்: