புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய மேம்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் இரணியலில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்றும், விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
வந்தே பாரத் ரெயில் ஒன்றினை சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், வேளாங்கன்னிக்கு பக்தர்கள் செல்ல வாராந்திர ரெயில், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.அதுபோல் நீண்ட காலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் ரெயில் நிறுத்தங்கள் குறித்தும் கோரிக்கை வைத்தார். கோவிட் காலத்திற்கு முன்பிருந்த போல் ரெயில் நிறுத்தங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார், குறிப்பாக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் தேவை என கேட்டு கொண்டார்.
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு நான்கு வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்
2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!